முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை சென்செக்ஸ் 71 புள்ளி சரிவு!
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைய துவங்கிய குறியீட்டு எண்கள், மதியம் சுமார் இரண்டரை மணிக்கு பிறகே சிறிது அதிகரிக்க துவங்கியது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதிப்பு இருந்தது. காலையில் சிங்கப்பூர் குறியிட்டு எணகள் குறைந்தன. இது மதியத்திற்கு பிறகு அதிகரித்தது.

சீனாவின் சியோல் காம்போசிட் மேலும் அதிக அளவு குறைந்தது.

இதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மாலையில் இறுதி நேரத்திலேயே சிறிது உயர துவங்கின. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் சுமால் கேப், மிட் கேப் பிரிவில் உள்ள பங்குகள் அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 71.27 6 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 16,015.56 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.14 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,830.25 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 87.82, மிட் கேப் 5.23 புள்ளிகள் அதிகரித்தது. பி.எஸ்.இ. 500- 9.47 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 55, சி.என்.எக்ஸ். ஐ.டி 95.95, பாங்க் நிஃப்டி 151.60,சி.என்.எக்ஸ் 100-03.15, , சி.என்.எக்ஸ் 500-05.00,சி.என்.எக்ஸ் மிட் கேப் 23.30,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-22.25 புள்ளிகள் குறைந்தன.
அதே நேரத்தில் சி.என்.எக்ஸ் டிப்டி 03.80 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1493 பங்குகளின் விலை அதிகரித்தது, 1223பங்குகளின் விலை குறைந்தது, 59 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல்எஸ்டேட் 2.28%
மின் உற்பத்தி பிரிவு 1.02%, உலோக உற்பத்தி பிரிவு 0.79% அதிகரித்தன.

பொதுத்துறை நிறுவனங்கள் 0.40%,தகவல் தொழில் நுட்ப பிரிவு 3.05%, வாகன உற்பத்தி பிரிவு 1.22%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.57%, தொழில்நுட்ப பிரிவு 0.88%, வங்கி பிரிவு 1.51%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.62% குறைந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 16 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது.
1 | 2  >>  
மேலும்
மும்பையில் வெள்ளி விலை ரூ.405 உயர்வு!
கடலை பயறு விலை ரூ.100 உயர்வு!
மூன்று நாட்களில் தங்கம் விலை ரூ.470 உயர்வு!
பங்குச் சந்தைகளில் சரிவு
பங்குச் சந்தை சென்செக்ஸ் 161 புள்ளி சரிவு!
மும்பை சந்தையில் தங்கம் விலை ரூ.100 உயர்வு!