முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகளின் எதிரொலியாக தொடர்ந்து குறைந்துவந்த இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.

மும்பை பங்கு சந்தைக் குறியீடு இன்றைய காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 15,000 புள்ளிகளைத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 532 புள்ளிகள் உயர்ந்து 15,366 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 4,686 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

நிக்கி, ஹாங்செங் உள்ளிட்ட ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் எதிரொலியே இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
விளக்கெண்ணெய் விலை ரூ.100 உயர்வு!
சென்னையில் தங்கம் விலை ரூ.215 குறைந்தது!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் வெள்ளி விலை ரூ.600 குறைந்தது!
பங்குச் சந்தை 24 புள்ளி உயர்வு!
மும்பையில் தங்கம் ‌விலை ரூ.335 குறைந்தது!