தென் மாவட்டங்களில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று காய்கறி வியாபாரி சங்கத் தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு 50 முதல் 40 வண்டிகள் வரும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ளதால் 25 முதல் 20 வண்டிகளே வருகின்றன. இதனால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரங்களாக தேங்காய் விலை ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் ஒரு தேங்காய் ரூ.9 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்துக்கு இந்த விலை ஏற்றம் இருக்கும் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
சிறிய தேங்காய் ரூ.09 பெரிய தேங்காய் ரூ.15 கோஸ் ரூ.03 ஊட்டி கேரட் ரூ.10 பெங்களூர் கேரட் ரூ.10 பீட்ரூட் ரூ.06 சவ்சவ் ரூ.06 நுனுகோல் ரூ.08 முள்ளங்கி ரூ.04 வெள்ளரிக்காய் ரூ.05 பீன்ஸ் ரூ.15 கத்தரிக்காய் ரூ.10 அவரைக்காய் ரூ.22, 25 புடலங்காய் ரூ.10 வெண்டைக்காய் ரூ.12 பாகற்காய் ரூ.15 மிளகாய் ரூ.09 கொட மிளகாய் ரூ.20 முருங்கக்காய் ரூ.40 இஞ்சி ரூ.30 சேனைக் கிழங்கு ரூ.09 சேம்பு ரூ.10 உருளைக்கிழங்கு ரூ.10 கோவக்காய் ரூ.10 பட்டாணி ரூ.20 சுரக்காய் ரூ.03 நாட்டு தக்காளி ரூ.15 பெங்களூர் தக்காளி ரூ.16 பூசணி ரூ.12 நாசிக் வெங்காயம் ரூ.07 சாம்பார் வெங்காயம் ரூ.17 மாங்காய் ரூ.10 பாகற்காய் ரூ.15 காலிபிளவர் (ஒன்று) ரூ.08 காலிபிளவர் (ஒரு மூட்டை) ரூ.60 பரங்கிகாய் ரூ.08
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஆப்பிள் ரூ.80 பைன் ஆப்பிள் ரூ.20 ஆரஞ்சு ரூ.30 சாத்துக்குடி ரூ.25 கொய்யா ரூ.12 க.திராட்சை ரூ.80 ப.திராட்சை ரூ.40 மாதுளை ரூ.30 வாழைப்பழம் ரூ.12 செவ்வாழைப்பழம் ரூ.32 சீத்தா ரூ.20 பப்பாளி ரூ.07 சப்போட்டா ரூ.08 கிரினி பழம் ரூ.21 தர்பூசணி ரூ.10
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.200 கனகாமரம் ரூ.300 சம்பங்கி ரூ.100 100 ரோஸ் ரூ.40 குயின் ரோஜா (100 பூ) ரூ.50 கோழி கொண்டை ரூ.50 வாடா மல்லி ரூ.50 செண்டு பூ ரூ.15 அரளி பூ ரூ.140
|