முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை 337 புள்ளிகள் சரிவு!
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் பத்தாவது நிமிடத்திலேயே குறைய ஆரம்பித்தன, மதியம் 1.30 வரை தொடர்ந்து குறைந்து வந்த குறியீட்டு எண்கள் அதற்கு பிறகு சிறிது உயர ஆரம்பித்தது. ஆனால் மாலை வர்த்தகம் முடிவடையும் வரை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இறுதியாக குறைந்தது. நேற்றும், இன்றும் சேர்த்து மொத்தம் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்துள்ளது.

இன்று மாலை வர்த்தகம் முடிவடையும் போது, சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 337.99 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,339.89 ஆக குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 350 புள்ளிகள் குறைந்து இருந்தது. ஒரு நிலையில் 944.09 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 16,634.63 புள்ளிகளாக குறைந்தது.

சிறு முதலீட்டாளர்கள் உட்பட எல்லா தரப்பினரும் லாப கணக்கு பார்த்த காரணத்தினால் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 88.75 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,864.25 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 285.07, மிட் கேப் 182.62,பி.எஸ்.இ 500-154.54 புள்ளிகள் குறைந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ5,090 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. வெள்ளிக் கிழமை ரூ.6,721.65 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை ஆகி இருந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் 497 பங்குகளின் விலை அதிகரித்தது. 2198 பங்குகளின் விலை குறைந்தது. 42 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 302.15 சி.என்.எக்ஸ் ஐ.டி 43.10,பாங்க் நிஃப்டி 310.85,சி.என்.எக்ஸ் 100-97.05,சி.என்.எக்ஸ் டிப்டி 74.20,சி.என்.எக்ஸ் 500-93.65, சி.என்.எக்ஸ் மிட் கேப் 149.30,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -63.85 புள்ளிகள் குறைந்தன.

வர்த்தக நேரம் மாற்றம்!

செயற்கைகோள் தொடர்பு தடைபடுவதால் நாளை முதல் 18 ந் தேதி வரை பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி காலை 9.55 மணி முதல் 11.45 வரையிலும், அதன் பிறகு நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4.15 வரை வர்த்தகம் நடைபெறும். (நண்பகல் 11.45 முதல் 12.30 வரை வர்த்தகம் நடைபெறாது).

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 19 பங்குகளின் விலை குறைந்தது.
1 | 2  >>  
மேலும்
சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தை 900 புள்ளி சரிவு!
தங்கத்தின் விலை ரூ.12,700-யை எட்டியது!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
பங்குச் சந்தை கடும் சரிவு!