மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்து நிமிடங்களில் குறைய தொடங்கின. பிறகு இறுதி வரை தொடர்ந்து குறைந்தன.
ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு போனஸ் பங்கு வழங்கப் போவதாக வந்த தகவலால், பங்குச் சந்தையில் பின்னடைவு இருக்காது என கருதப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக தொடர்ந்து குறியீட்டு எண்கள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,850 பங்குகளின் விலை அதிகரித்தது. 878 பங்குகளின் விலை குறைந்தது. 46 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. மொத்தம் ரூ.4,951 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. வெள்ளிக்கிழமை 6,415.18 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாகி இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் முன்பேர சந்தையில் ரூ.32,416.67 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. வெள்ளிக்கிழமையன்று ரூ.42,675.67 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
இன்றைய குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ரிலையன்ஸ் பவர் பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடந்தது. இதன் அதிகபட்ச விலையாக ரூ.429.60 வரை அதிகரித்தது. இறுதியில் ரூ.413.65 என்று முடிந்தது. இது 7.53 விழுக்காடு உயர்வு. மொத்தம் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 67.20 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,048.05 ஆக குறைந்தது.
ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 49.40,சுமால் கேப் 134.22, புள்ளிகள் அதிகரித்தன. அதே நேரத்தில் பி.எஸ்.இ. 500- 02.44 புள்ளிகள் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5276.90 ஆக குறைந்தது.
அதே நேரத்தில் நிப்டி ஜீனியர் 27,பாங்க் நிஃப்டி 24.15,சி.என்.எக்ஸ் மிட் கேப் 4.15, மிட்கேப் 50-4.10 புள்ளிகள் அதிகரித்தன.
ஆனால் சி.என்.எக்ஸ் ஐ.டி 52.95 சி.என்.எக்ஸ் 100- 19.35,சி.என்.எக்ஸ் டிப்டி 36.40, சி.என்.எக்ஸ் 500-11.30 புள்ளிகள் குறைந்தன.
|