முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை 341 புள்ளிகள் உயர்வு!
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்தே பங்கு விலைகள் அதிகரித்தன. கடந்த ஐந்து நாட்களாக குறைந்த பங்குகளின் விலை இன்று அதிகரிக்க ஆரம்பித்தது.

பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் வர்த்தகம் முடியும் வரை சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரிப்பதும் பிறகு குறைவதுமாக இருந்தாலும் மதியம் 3 மணிக்கு பிறகு ஏறுமுகமாகவே இருந்தது.

மற்ற பிரிவுகளில் மும்பை பங்கு சந்தையின் சுமால் கேப், தேசிய பங்குச் சந்தையின் தொழில் நுட்ப பிரிவு குறியீட்டு எண்கள் தவிர மற்ற குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 341.13 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,949.14 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 17.15, பி.எஸ்.இ 500- 99.87 புள்ளிகள் அதிகரித்தன.சுமால் கேப் 123.98 புள்ளிகள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 91.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4929.45 ஆக அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 36.45, பாங்க் நிஃப்டி 236.40,சி.என்.எக்ஸ் 100-78.70,சி.என்.எக்ஸ் டிப்டி 61.30,சி.என்.எக்ஸ் 500-57.25,சி.என்.எக்ஸ் மிட் கேப் 53.95, மிட்கேப் 50-0015.40 புள்ளிகள் அதிகரித்தன. சி.என்.எக்ஸ் ஐ.டி மட்டும்5.35 புள்ளிகள் குறைந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 7 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
1 | 2  >>  
மேலும்
மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!
பங்குச் சந்தைகளில் இருந்து வந்த பின்னடைவு இன்று காலையில் மாறியது!
பங்குச் சந்தை உயருமா?
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!