முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை 585 புள்ளிகள் உயர்வு!
பங்குச் சந்தையில் கடந்த நான்கு நாட்களாக சரிந்து வந்த குறியீட்டு எண் இன்று அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 584.71 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,233.42 ஆக உயர்ந்தது.

இதே மாதிரி தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 179.80 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,137.45 ஆக முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஒரு நிலையில் 663.79 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,233.42 ஆக அதிகரித்தது. இதே போல் நிஃப்டி 201.90 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,339.35 ஆக அதிகரித்தது.

முன்பேர சந்தையில் பிப்ரவரி மாத ஒப்பந்தத்தில் அதிக பாதிப்பில்லாமல், விலைகள் அதிகரித்தது. இதனால் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.

இன்று தகவல் தொழில்நுட்பம், உலோக உற்பத்தி, வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 17.60, சுமால் கேப் 51.31 புள்ளிகள் குறைந்தது. பி.எஸ்.இ-500 137.13 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 89.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 236, பாங்க் நிப்டி 100.80, சி.என்.எக்ஸ் 100-156.60, சி.என்.எக்ஸ் டிப்டி 162.95, சி.என்.எக்ஸ் 500- 101.05,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 27.25 புள்ளிகள் அதிகரித்தது.

சி.என்.எக்ஸ் மிட் கேப் மட்டும் 1.60 புள்ளிகள் குறைந்தது.

பங்குகளின் இறுதி விலை நிலவரம் :

மும்பை சென்செக்ஸ் பிரிவில் வர்த்தகம் முடிந்த போது பங்குகளின் விலை விபரம்.

விலை அதிகரித்த பங்குகளின் விபரம்.
பஜாஜ் ஆட்டோ பங்கு விலை ரூ.94 அதிகரித்து பங்கின் விலை ரூ.2449.65 ஆக அதிகரித்தது.
பார்தி ஏர்டெல் பங்கு விலை ரூ.43.30 அதிகரித்து பங்கின் விலை ரூ.907.75 ஆக உயர்ந்தது
பி.ஹெச்.இ.எல். பங்கு விலை ரூ.1.25 அதிகரித்து பங்கின் விலை ரூ.2065.35 ஆக உயர்ந்தது.
1 | 2  >>  
மேலும்
சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை!
மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!
மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தை நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!