முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை தங்கம் வெள்ளி விலை!
மும்பையில் தங்கம் வெள்ளியின் விலை இன்று குறைந்தது.

மும்பையில் மட்டுமல்லாது சர்வதேச சந்தைகளிலும், இதன் விலை குறைந்தது.

மும்பையில் தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அதே போல் தொழில் துறையினர் வெள்ளியை வாங்காத காரணத்தினால் இதன் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110 குறைந்தது.

நியூயார்க் சந்தையில் பார் வெள்ளியின் விலை சிறிதளவு 1 அவுன்ஸ் 16.61/16.66 டாலராக குறைந்தது. இதன் நேற்றைய விலை 16.68/16.73 டாலர்.

தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 7 டாலர் குறைந்தது. இன்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 921.50/922.50 டாலர். நேற்றைய விலை 928.60/929.30 டாலர். அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தங்கத்தில் முதலீடு செய்து இருந்தவர்கள் விற்பனை செய்து இலாப கணக்கு பார்த்ததால், இதன் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மும்பையில் இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,820 (நேற்று ரூ.11,895)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,770 (.11,845)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,970 (21,080)
மேலும்
மும்பை தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்தது!
சென்னை எண்ணெய் சந்தை நிலவரம்!
வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தை‌க‌ளி‌ல் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!
மும்பை தங்கம், வெள்ளி சந்தை இறுதி நிலவரம்!