முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை நிலவரம் பிற்பகலில் மாறியது!
பங்குச் சந்தைகளில் காலையில் நிலவிய நெருக்கடி, பகல் 12 மணிக்கு பிறகு மாறியது.

இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்த பிறகு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 875.41 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,729.94 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 309.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,899.30 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் உயர்ந்தபட்ச அளவிற்கு பங்குகளின் விலைகள் குறைந்தன.

மும்பை சென்செக்ஸ் 2,029.05 புள்ளிகளும், நிஃப்டி 630.45 புள்ளிகளும் குறைந்தன. இதனால் காலை 1 மணி நேரம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

இந்த நேரத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. இந்திய நிறுவனங்களின் நிலையும் பலமாக இருக்கின்றது. மற்ற நாடுகளின் நிலைமையில் இருந்து இந்திய சூழ்நிலை மாறுபட்டது. எனவே முதலீட்டாளர்கள் பீதி அடைய வேண்டாம் என்று நம்பிக்கை ஊட்டினார்.

இதன் பிறகு வர்த்தகம் துவங்கிய போது சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. பங்குச் சந்தைகளில் அதிக அளவு பாதிப்பில்லாமல், பங்குகளின் விலை அதிகரிக்கத் துவங்கியது.

மதியம் 3 மணிக்கு பிறகு குறிப்பிடும்படி முன்னேற்றம் இருந்தது. பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிவடைந்த பிறகு, மும்பை சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 875.41 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,729.94 புள்ளிகளாக முடிவடைந்தது.

இதே போல் நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4899.30 ஆக இருந்தது.

நேற்றை இறுதி நிலவரத்தை விட, மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 679.74, சுமால் கேப் 883.27, பி.எஸ்.இ500 458.11 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஜுனியர் 675.40, சி.என்.எக்ஸ் ஐ.டி 159.65, பாங்க் நிஃப்டி 356.50, சி.என்.எக்ஸ்100- 308.35, சி.என்.எக்ஸ் டிப்டி 274.65, சி.என்.எக்ஸ் 500- 291.25, மிட் கேப் 522.85, மிட் கேப் 50- 326.55 புள்ளிகள் குறைந்தன.

- இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மும்பை சென்செக்ஸ் 2273 புள்ளிகள் குறைந்ததால் பங்குச் சந்தை வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

- பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அல்லது குறியீட்டு எண் 10 விழுக்காடு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, பங்கு வர்த்தகம் நிறுத்தப்படும். இந்த முறையை சர்க்யூட் பிரேக்கர் என அழைக்கின்றார்கள்.

-இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி ஒரு நிலையில் 5230.35 ஆக அதிகரித்தது. இதற்கு நேர் மாறாக 4448.50 புள்ளிகளாக குறைந்தது.

- இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஒரு நிலையில் 15,3332.42 புள்ளிகளாக குறைந்தது.

- ஜனவரி 8 ந் தேதி முதல் இன்று வரை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 25 விழுக்காடு குறைந்துள்ளது.
1 | 2  >>  
மேலும்
கடலை எண்ணெய் விலை குறைந்தது!
மும்பை தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
ப‌ங்‌கு‌ச் ச‌ந்தை‌ : ஏ‌ற்ற இற‌க்க‌ம் தொட‌ர்‌கிறது!
தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
பங்குச் சந்தைகளில் சிறிது முன்னேற்றம்!
பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்த‌ம்!