முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளியன் விலை கிலோவுக்கு ரூ.85-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10 குறைந்தது.

சர்வதேச சந்தையில் இருந்து வந்த தகவல்களை அடுத்து, மும்பையில் தங்கம், வெள்ளி வாங்குவதற்கு நகை தயாரிப்பாளர்கள், தொழில் துறையின்ர் ஆர்வம் காட்டாத காரணத்தினால் விலைகள் குறைந்தது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 878.25/879.25 டாலராக இருந்தது. இது வெள்ளிக் கிழமை விலையை விட 3 டாலர் குறைவு. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 அவுன்ஸ் 881.90/882.60 டாலர்.

இதே போல் வெள்ளியின் விலையும் சிறிய அளவில் குறைந்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.06/16.11.வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 அவுன்ஸ் 16.14/16.19 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,295 (வெள்ளி ரூ.11,305 )
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,245 (ரூ.11,255)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,600 (ரூ.20,685)
மேலும்
பங்குச் சந்தைகளில் வரலாறு காணா சரிவு!
நல்லெண்ணெய் விலை உயர்வு!
வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தைகளில் தொடர்ந்து கடும் சரிவு!
பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌உய‌ர்வு!