முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!
மும்பை தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவிற்கு (10 கிராம்) ரூ.11,280 ஆக உயர்ந்தது. இது நேற்றைய விலையை விட ரூ.200 அதிகம்.

அடுத்த வாரம் திருமண சீசனாக இருப்பதால் தங்கத்தின் தேவை அதிக அளவு இருந்தது. ஆனால் அந்நிய நாடுகளில் இருந்து வந்த தகவல்களால், வர்த்தகர்கள் தங்கம் விற்பனை செய்ய தயங்கினர். இதனால் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.525 அதிகரித்தது.

இன்றைய இறுதி விலை நிலவரம்.
24 காரட் 10 கிராம் ரூ.11,330 (நேற்று 11,125)
22 காரட் 10 கிராம் ரூ.11,280 (11,080)
பார் வெள்ளி கிலோ ரூ.20,440 (19,915)
மேலும்
பங்குச் சந்தை 3 புள்ளிகள் குறைவு!
மும்பை தங்கம், வெள்ளி விலை இன்றும் உயர்வு!
சென்னை‌யி‌ல் இ‌ன்று எண்ணெய் விலை
சென்னை : தங்கம் வெள்ளி விலை கடும் உயர்வு!
பங்குச் சந்தை சரிவு!
செ‌ன்னை கா‌ய் க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!