ஸ்டான்டர்ட் சார்டர்ட் பிரிமியர் ஈக்விட்டி,டாரஸ் டிஸ்கவரி, சுந்தரம் பி.என்.பி. பரிபாஸ் கேபக்ஸ் ஆஃபர்சுனிட்டி, ஜே.எம்.எமர்ஜிங் லீடர், ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்டால் இன்பிராக்சர்., டி.டபிள்யூ.எஸ் இன்வெஸ்ட்மென்ட் ஆஃபர்சுனிட்டி, கனரா ரபிக்கோ இன்பிராக்சர், கோடக் ஆஃபர்சுனிட்டி, ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஈக்விட்டி ஆகிய பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு சுமார் 100 விழுக்காடு வருவாய் கிடைத்துள்ளது. இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட209 பரஸ்பர நிதி திட்டங்களில் 139 திட்டங்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது. சென்ற வருடம் பங்குச் சந்தையில் பங்குகள் அதிகளவு வாங்கப்பட்டது.
இதனால் இதன் விலைகளும் அதிகரித்தன. பங்குகளின் விலை உயர்வு காரணமாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த பரஸ்பர நிதிகளின் வருவாய் அதிகரித்தது.எந்த பரஸ்பர நிதியும் நஷ்டமடையவில்லை.
முன்பு பரஸ்பர நிதிகள் பொதுவாக பங்குச் சநதையில் முதலீடு செய்வது, நிதிச் சந்தையில் முதலீடு என்ற திட்டங்களுடன் யூனிட்டுகளை வெளியிட்டு முதலீடு திரட்டி வந்தன.
சென்ற வருடத்தில் இருந்து குறிப்பிட்ட துறையில், அதனைச் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்யும் திட்டங்களுடன் யூனிட்டுகளை வெளியிடுகின்றன. உதாரணமாக அடிப்படை கட்டமைப்பு துறை, மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்று குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள்ஸ, கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்டுகின்றன.
இது போல் சென்ற வருடம் துறை சார்ந்த யூனிட் வெளியிட்ட பரஸ்பர நிதி திட்டங்களில் ரிலையன்ஸ் பவர் டைவர்சிபைட் பவர் செக்டர் யூனிட்டுகளுக்கு 120 விழுக்காடு வருவாய் கிடைத்துள்ளது. இது போன்ற திட்டங்களில் மட்டுமல்லாது, பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து, அதன் லாப-நஷ்டத்தை கணிக்க முடியாதவர்கள் யூனிட்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருவாய் பெற்றுள்ளனர் என்பது வால்யூவ் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரி திரேந்திர குமார் கூறுகையில், சிறு முதலீட்டாளர்கள் பரஸ்பர யூனிட்டுகளில் முதலீடு செய்யும் போது சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் மட்டும் அதிக வருவாய் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நீண்ட காலம் தொடர்ச்சியாக வருவாய் கிடைக்கும் திட்டங்களின் யூனிட்டுகிள் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
|