வேளாண்மை | சந்தை நிலவரம் | செய்திகள் | கட்டுரைகள் | ச‌ந்தை
முதன்மை பக்கம் » செய்திகள் » வ‌ணிக‌ம் » வேளாண்மை » கரும்பு விலை நிர்ணயம் நியாயமானதே: அரசு (Rs.129 is fair and remunerative for Sugarcane- says Govt.)
Feedback Print Bookmark and Share
 
2009-10ஆம் நிதியாண்டிற்கு கரும்பு கொள்முதல் விலையை ரூ.129.00 ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்தது எல்லாவகையிலும் நியாயமானதே என்று வேளாண் இணை அமைச்சர் கே.வி. தாமஸ் கூறினார்.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் தாமஸ், 2008ஆம் ஆண்டில் கரும்பிற்குச் சட்டப்பூர்வ குறைந்தப்பட்ச விலையாக ரூ.81.18 நிர்ணயிக்கப்பட்டது. இது 9.0 விழுக்காடு பிழி திறன் கொண்ட ஒரு குவிண்டால் கரும்பிற்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆண்டிற்கு 9.5 விழுக்காடு பிழி திறன் கொண்ட கரும்பிற்கு குவிண்டாலிற்கு ரூ.129.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கரும்பு உற்பத்திச் செலவிற்கு மேல் 15 விழுக்காடு இலாபமும், இழப்பு காப்பீடாக ரூ.25ம், போக்குவரத்துச் செலவும் சேர்த்து நியாயமான, இலாபமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.வி. தாமஸ் கூறினார்.

இந்த விலை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 44 விழுக்காடு அதிகம் என்று கூறிய அமைச்சர், இந்த ஆண்டிற்கான விலையை பிழி திறன் அடிப்படையிலும், சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையுடன் ஒப்பிட்டால் 51 விழுக்காடு அதிகம் என்றும் கூறினார்.

கரும்பு உற்பத்தி குறையும்

இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த கரும்பு உற்பத்தி கடந்த ஆண்டை விட 106 மில்லியன் டன் குறைவாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி 249 மில்லியன் டன்களாக மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் தாமஸ் கூறினார்.

கடந்த ஆண்டு 355.52 டன் கரும்பு உற்பத்தியானது. தென்மேற்குப் பருவ மழை காலம் கடந்து பெய்ததால் இந்த அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பார்பதாகத் தாமஸ் தெரிவித்தார்.

கரும்பிற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.250 நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்