முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > வேளாண்மை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌விவசா‌யிக‌ள் சுய உத‌வி‌க் குழு அமை‌க்க‌ப்படு‌ம்: த‌மிழக அரசு!
மக‌ளி‌‌ரசுஉத‌வி‌ககுழு‌க்களை‌பபோல ‌விவசா‌யிகளு‌மபய‌ன்பெறு‌ம் வகை‌யி‌லவரும் நிதியாண்டில் விவசாயிகள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் எ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

முதற்கட்டமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெறும் ஒரு இலட்சம் விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட பத்தாயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் எ‌ன்று‌ம் இக்குழுக்கள் கூட்டுப் பொறுப்புடைய அமைப்புகளாக செயல்பட்டு கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து எளிதில் கடன் பெற இயலும் எ‌ன்று‌ம் அரசு கூ‌றியு‌‌ள்ளது.

"இந்தக் குழுக்களுக்குச் சுழல் நிதியாக அரசின் சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செ‌ய்யப்பட்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம், இந்த குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள், தங்களின் அவசரத் தேவைகளுக்கான கடனையும் குழுவிடமிருந்தே பெறலாம்.

இதுமட்டுமன்றி, உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வேளாண் இடுபொருட்களைக் குறைந்த விலையில் வாங்கவும், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்கவும் வா‌ய்ப்பு உருவாகும்" எ‌ன்று த‌மிழக அர‌சி‌ன் ப‌ட்ஜெ‌ட்டி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌‌‌ள்ளது.
மேலும்
‌நீ‌ர்வள ‌நிலவள‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ரூ.585 கோடி ஒது‌க்‌கீடு!
ந‌தி‌க‌ள் இணை‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌‌ம் ‌விரை‌வி‌ல் துவ‌ங்க‌ப்படு‌ம்: த‌‌மிழக அரசு!
சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பாதிப்பு!
நெல் கொள்முதல் விலை: முடிவு எடுக்கவில்லை-சிதம்பரம்!
தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துக‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் உபயோகம்!
பால்கறக்கும் இயந்திரம் : நாம‌க்கல் விவசாயிகள் மகிழ்ச்சி