தொகு‌திக‌ள் | தே‌ர்த‌ல் முடிவுக‌ள் | செ‌ய்‌திகள‌் | ‌கிசு‌கிசு | தே‌ர்த‌ல் வரைபட‌ம்
முதன்மை பக்கம் செய்திகள்  தே‌ர்த‌ல் 2009  செ‌ய்‌திகள‌் > 7 தொகுதிகளிலும் பாமக-விற்கு படுதோல்வி
செ‌ய்‌திகள‌்
கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்ற பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை படுதோல்வி அடைந்தது.

மத்தியில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இடம்பெற்று விட்டு, கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, அஇஅதிமுக கூட்டணிக்குத் தாவிய பாமக-விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்ட பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் அக்கட்சியினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாமக போட்டியிட்ட தொகுதிகள் :

ஸ்ரீபெரும்புதூர் - ஏ.கே. மூர்த்தி

அரக்கோணம் - ஆர்.வேலு

கள்ளக்குறிச்சி - கோ. தன்ராஜ்

தர்மபுரி - ஆர். செந்தில்

திருவண்ணாமலை - ஜே. குரு

சிதம்பரம் - பொன்னுசாமி

புதுச்சேரி - பேராசிரியர் ராமதாஸ்.

இந்த 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.