முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > தேர்வு முடிவுகள் > SLET தேர்வு முடிவுகள் வெளியீடு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
SLET தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழக கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுவதற்காக கடந்தாண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு கோரிக்கையின் பேரில் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித் தேர்வு (SLET) புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் 10 மையங்களில் கடந்தாண்டு டிசம்பரில் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் (b-u.ac.in) இன்று (ஜூன் 9) வெளியிடப்பட்டுள்ளது.

SLET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனியாகத் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மாநில கல்லூரி விரிவுரையாளர் தேர்வு செயலரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அண்ணா பல்கலை B.E., B.Tech. தேர்வு முடிவுகள்
பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப உதவி அதிகாரித் தேர்வு முடிவுகள் வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 இறுதி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
மதுரை காமராஜர் MBA தேர்வு முடிவுகள்
10ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவுகள்
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியீடு