முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > வாய்ப்புகள் > இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு: ஜூலை 6 கடைசிநாள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு: ஜூலை 6 கடைசிநாள்
இந்தியன் எக்னாமிக் சர்வீஸ், இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் ஆகியவற்றில் கிரேட்-4 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரவேற்றுள்ளது.

வயது தகுதி: இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 1, 2009 அன்று 21 வயதிற்கு மேல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி: இதில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் (Indian Economic Service-IES) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், எக்னாமிக்ஸ், அப்ளைட் எக்னாமிக்ஸ், பிசினஸ் எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல் இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் (Indian Statistical Service-ISS) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஸ்டாடிஸ்டிக்ஸ், மேத்தமெட்டிக்கல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அப்ளைட் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை தலைமை தபால் அலுவலகங்கள், இதர தபால் அலுவலகங்களில் ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இத்தேர்வுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் ஆக அனுப்ப வேண்டும். எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Secretary, Union Public Service commission, Dholpur house, Shahjahan Road, New Delhi - 110069 என்ற முகவரிக்கு ஜூலை 6ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். upsc.gov.in என்ற இணையதளத்திலும் இதுபற்றி மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மத்திய காவல்படையில் 2,153 எஸ்.ஐ. பணியிடங்கள்
கடலோரக் காவல்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு
இளைஞர்களுக்கு விமானப் படையில் வாய்ப்பு
அபுதாபி: நர்ஸ் வேலை‌க்கு ஆ‌ட்க‌ள் தே‌ர்வு
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு கப்பல் படையில் நிரந்தர பணிவாய்ப்பு
பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகியகால பயிற்சி!