முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > வாய்ப்புகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உடல் ஊனமுற்றோருக்கான கடன் வாய்ப்புகள்!
handi
webdunia photoWD
இந்தியாவில் உடல் ஊனமுற்றோர் சொந்த தொழில் துவங்கி அதில் வெற்றி பெற தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை, பலருக்கு வேலை கொடுக்கும் வகையில் உடல் ஊனமுற்றவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த கழகம் செயல்படுகிறது.

இதில்,

சிறிய நிறுவனங்களுக்கு:

சிறிய கடை, தொழில் நிறுவனம் போன்றவற்றை துவக்க உடல் ஊனமுற்றவர்களுக்கு கடன் அளிக்கப்படுகிறது. கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சமும், பொதுமக்களுக்கு சேவை தொடர்பான அமைப்புகள் தொடங்க அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையும் கடன் அளிக்கப்படும்.

வாகனத்திற்கு:

வணிக நோக்கத்துடன் வாகனங்கள் வாங்கவும் கடன் அளிக்கப்படுகிறது. அதாவது ஆட்டோ, ஆட்டோ ரிக்‍ஷா, வாடகைக்கு ஓட்டப்படும் கார் போன்றவை வாங்க அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்கப்படும்.

தொழில் துவங்க:

சிறுதொழில்கள் துவங்க அதிகபட்சமாக 5 லட்சம் வரை கடன் அளிக்கப்படும்.

இந்த தொழில் நிறுவனத்தின் முதலாளி அல்லது முதன்மை செயலாளர் ஒரு உடல் ஊனமுற்றவராகவும், அதில் பணியாற்றும் பணியாளர்களில் 15 விழுக்காடு பேராவது உடல் ஊனமுற்றவராகவும் இருக்க வேண்டும்.
1 | 2  >>  
மேலும்
த‌னியா‌ர் தொ‌‌ழி‌ற்ப‌யி‌ற்‌‌சி ‌மைய‌மாணவ‌ர்களு‌க்கு‌ம் சலுகைக‌ள் வழ‌ங்க கோ‌ரி‌க்கை!
மதுரையில் சுந்தரம் பிசினஸ் பி.பி.ஓ அமைக்கிறது!
பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
அ‌றிவுசா‌ர் அய‌ல்ப‌ணி‌த் துறை‌யி‌ல் ப‌ணியாள‌ர் ப‌ற்றா‌க்குறை: அசோசெ‌ம் தகவ‌ல்!
வேலைவா‌ய்‌ப்பை உருவா‌க்கு‌ம் ‌'விமான‌ங்க‌ள்'
சட்டத்துறையில் அயல் அலுவலக பணி வாய்ப்பு!