முதன்மை பக்கம்  செய்திகள்  வேலை வழிகாட்டி  வாய்ப்புகள்
 
கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்
Webdunia
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

இதில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ரிலையன்ஸ் மொபைல், ஹச், ஏ.பி.என். ஆம்ரோ வங்கி, சிட்டி பைனான்சியல், ஏ.ஐ.ஜி. ஆகிய நிறுவனத்தினர் கலந்துகொண்டு விற்பனைப்பிரிவு, தகவல் தொடர்பு, வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் மட்டுமல்லாமல், தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.

இந்த வேலைவாய்ப்பு முகாமை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதனை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ப.சிவகாமி தெரிவித்துள்ளார்.
மேலும்
சித்தா படிக்கலாம் வாங்க
மருத்துவ ஆய்வக, செவிலிய உதவியாளர் பயிற்சி
மறுகூட்டல், தேர்வு எழுத விண்ணப்பிக்க இன்றே கடைசி
இக்னோ வழங்கும் பயனுள்ள பாடத்திட்டங்கள்
காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்-2006 விண்ணப்பிக்க விரும்புவோர்...
அறிவை வளர்க்கும் அபாக° பயிற்சி