முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
துபாய், சீனா, சவூதி அரேபியாவில் மார்க்கெட்டிங் வல்லுனர்களுக்கு வேலை!
துபாய், சீனா, சவூதி அரேபியாவில் மார்க்கெட்டிங் வல்லுனர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது எ‌ன்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் பு.ரா.பிந்துமாதவன் கூறுகை‌யி‌ல், துபாய் நாட்டில் உள்ள வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஒன்றிற்கு 35 வயதிற்குட்பட்ட சி.ஏ. அல்லது எம்.பி.ஏ. படித்து 6 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிதிமேலாளர்கள் தேவை. அதுபோல 30 வயதிற்குட்பட்டு பி.காம். தேர்ச்சி பெற்று 3 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ள உதவி கணக்காளர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

துபாய், சீனா, சவூதி அரேபியாவில் பணிபுரிய பட்டப்படிப்பு படித்து 2 ஆண்டுகளுக்கு மேல் வணிகம் தொடர்பான நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம், ஏற்றுமதிக்கான அறிவுத்திறன் பெற்ற விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் வல்லுனர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள். மேற்கண்ட பணிகளுக்கு கம்ப்யூட்டரில் இ.ஆர்.பி. என்விரான்மென்ட் பணி தொடர்பில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி, அனுபவம் உள்ளவர்கள் தங்களது கல்வி, அனுபவம், கடவு‌ச் ‌சீ‌‌ட்டு ஆகியவற்றின் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து, சென்னை அடையாறு எண்.48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, (டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில்) என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தின் முதல்தளத்தில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும்
புள்ளியியல் அலுவலர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு‌க்கு ‌‌வி‌ண்ண‌ப்‌‌பி‌க்கலா‌ம்!
அரசு பள்‌ளிகளில் மேலும் 2,020 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!
தமிழக காவ‌ல் துறைக்கு 5,959 ஆண்- பெண் காவ‌ல‌ர்க‌ள் தேர்வு!
‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு‌ப் ப‌யி‌ற்‌சி
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு மே 2க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
கல்லூரி நிகழ்ச்சிக்கு நடிகர்களை அழைக்ககூடாது : துணைவேந்தர் உத்தரவு