முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழக காவ‌ல் துறைக்கு 5,959 ஆண்- பெண் காவ‌ல‌ர்க‌ள் தேர்வு!
தமிழக காவ‌ல்துறைக்கு 5,959 ஆண்-பெண் காவல‌ர்க‌ள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏப்ரல் 15ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்ப மனுக்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக காவ‌ல் துறைக்கு இரண்டாம் நிலை ஆண் காவல‌ர் 4,171 பேரும், பெண் காவல‌ர் 1,788 பேரும் (மொத்தம் 5,959 பேர்) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பதாரர்களின் தகுதிகள் குறித்த தகவல்களும் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. www.tn.gov.in/tnusrb என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் ரூ.150-க்கான வங்கி `டிராப்ட்'டையும் அனுப்பி வைக்க வேண்டும்.

ஏப்ரல் 15ஆ‌ம் தேதிக்குள் விண்ணப்ப மனுக்கள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப மனுக்களை தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், நம்பர்: 807, 2-வது தளம், அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு‌ப் ப‌யி‌ற்‌சி
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு மே 2க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
கல்லூரி நிகழ்ச்சிக்கு நடிகர்களை அழைக்ககூடாது : துணைவேந்தர் உத்தரவு
செ‌ன்னை‌யி‌ல் நாளை முதல் வேலைவாய்ப்பு கண்காட்சி!
10‌ம் வகு‌ப்பு படி‌த்தவ‌ர்களு‌க்கு வேலைவா‌ய்‌ப்புட‌ன் தொ‌ழி‌ல் ப‌யி‌ற்‌சி!
தொழிற்பயிற்சி படித்து முடித்து வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கான சிறப்பு பயிற்சி!