முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
25 லட்சம் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!
நாடு முழுவதிலும் அதிக மதிப்பெண்கள் பெறும் 25 லட்சம் பள்ளி சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.1,868.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
டெல்லியில் இன்று நடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தின் மீதான மத்திய அமைச்சரவை கூட்டதை அடுத்து, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், "அவற்றில் 30 விழுக்காடு உதவித்தொகை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சார்ந்த மாணவிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இந்தியாவில் அரசு அல்லது தனியார் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒருவருக்கு அதிகபட்ச கல்விக்கட்டணமாக மாதம் ரூ.350 உதவித்தொகை வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு முதல் விடுதிச்செலவு ரூ.600-ல் இருந்தும், விடுதியில் தங்காத மாணவர்களுக்கு முதலாம் வகுப்பில் இருந்து ரூ.100-ம் வழங்கப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து சேர்க்கை கட்டணமாக ஆண்டுக்கு ரூ.500 வழங்கப்பட உள்ளது.
இத்திட்டங்களுக்கான செலவில் ரூ.1,408.40 கோடி மத்திய அரசும், ரூ.460.10 கோடி மாநில அரசும் பகிர்ந்துகொள்கிறது. யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை அனைத்து செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.
மேலும்
மசாலா தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்தை மே‌ம்படு‌த்த பு‌திதாக ஐ.ஐ.டி.!
அடு‌த்த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் அய‌ல் அலுவலக ப‌ணி‌களி‌ல் ஒரு கோடி பே‌ரு‌க்கு வேலைவா‌ய்‌ப்பு : நா‌ஸ்கா‌ம்!
உய‌ர்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் சேர‌ப் ப‌யி‌ற்சி அளிக்கு‌ம் பு‌திய இணையதளம்!
மத்திய பொறியியல் பணித் தேர்வு!
ம‌த்‌திய அரசு பொது‌ப்ப‌ணி‌ துறை‌யி‌ல் முது‌நிலை பொ‌றியாள‌ர் வேலை: 18‌க்கு‌ள் விண்ணப்பிக்க வேண்டும்!
கல்வி விசா : பிரிட்டிஷ் கவுன்சிலில் கருத்தரங்கு!