முதன்மை பக்கம்  செய்திகள் > வேலை வழிகாட்டி > செய்திகள்
 
1083 தோட்டகலை தொழிலாளர்கள் பணி நிரந்தரம் : கருணாநிதி!
Webdunia
10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தோட்டகலை தொழிலாளர்கள் 1083 பேர் பணி நிரந்தரம் செ‌ய்து‌ம், அவ‌‌ர்களு‌க்கு காலமுறை ஏ‌ற்ற ஊ‌திய‌ம் வழ‌ங்‌கியு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி ஆணை‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1083 பணியாளர்களால் தங்கள் பணியினை நிரந்தரம் செய்யுமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் இவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவர்களின் குடும்ப நலன் கருதி, அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் 1083 பணியாளர்களின் பணியினை நிரந்தரம் செய்தும், அவர்களுக்கு காலமுறை ஏற்ற ஊதியம் வழங்கியும் ஆணையிட்டுள்ளார் எ‌ன்று அத‌ி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
புகழ்பெற்ற ஆசிரியர்கள்
ஆசிரியருக்கு நன்றிச் செய்தி
பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்
தொழில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?
தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை கல்லூரிகள்