எதற்காகக் குடியுரிமைப் பணி ? (Civil Services - Scope and Prospects)
நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants).
இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களும், நிறைந்த அனுபவத்தைப் பெற நினைப்பவர்களும் இப்பணியில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இன்று உலகமயமாக்கம் (Globalisation) தாராளமயமாக்கம் ஆகியவை பரவலாக்கப்பட்ட சூழலில் குடியுரிமைப் பணிகளின் முக்கியத்துவம் உண்மையில் குறைந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். வருடாவருடம் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.
குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ். பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங்கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வரி, சுங்கம், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாமே!
பணிகள்
மத்திய தேர்வாணைக்குழு (UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது.
i.) Indian Administrative Service (I.A.S.) ii.) Indian Foreign Service (I.F.S.) iii.) Indian Police Service (I.P.S.) iv.) Indian P&T Accounts & Finance Service Group - A v.) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A vi.) Indian Customs and Central Excise Service - GP-A vii.) Indian Revenue Service GP-A viii.) Indian Ordinance Factories Service GP-'A' ix.) Indian Postal Service - GP - 'A' x.) Indian Civil Accounts Service GP-'A' xi.) Indian Railway Traffic Service GP-'A' xii.) Indian Railway Accounts Service GP-'A' xiii.)Indian Railway Personal Service GP-'A' xiv.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force xv.) Indian Defence Estates Service, GP-A xvi.) Indian Information Service (Junior Grade) GP-A xvii.) Indian Trade Service GP-A xviii.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force xix.) Central Secrateriat Service GP-B xx.) Railway Board Secretariat Service GP-B xxi.) Armed Forces Head Quarters Civil Service GP-B xxii.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B xxiii.) Pondicherry Police Service, Group - B
செலவு அதிகமாகுமா?
ஐ.ஏ.எஸ். படிக்க பணம் நிறைய வேண்டுமே! ஏகப்பட்ட செலவாகுமே! எங்களுக்கு முடியுமா? என்று தன்னிரக்கப்படுபவர்களுக்கு சிவில் சர்வீஸஸ் எழுத UPSC வசூலிக்கும் கட்டணம் மிகவும் குறைவு. நாம் எப்போதுமே வாங்குகிற செய்தித்தாள், மாதம் மூன்று, நான்கு முக்கியப் பத்திரிகைகள், சில புத்தகங்கள், முக்கியமான சில நோட்டீஸ்கள் எல்லாம் சேர்த்து ரூ. 5000/- போதும். இன்னும் கொஞ்சம் தாராளமாக இருந்தால் 10,000/- போதும்.
இந்த தொகையைக் கூட அரசு அளிக்கும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் ஊக்கத்தொகையிலேயே ஈடுகட்டிவிடலாம்.
ஒரு நல்ல நூலகத்தைத் தேர்ந்தெடுத்து புத்தகங்களை தேர்வு செய்வதன் மூலம் தகவல்களை திரட்டலாம். எல்லாப் புத்தகங்களையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு சில புத்தகங்கள் விரல் நகங்களைப் போல வேண்டியவை. விழியிமைகளைப் போல தேவையானவை. உதாரணத்திற்கு வேளாண்மையை விருப்பப் பாடமாகக் கொண்டவர்கள் வேளாண்மைக் கையேடு (Hand Book of I.C.A.R.) நிச்சயம் வாங்க வேண்டும்.
4 நண்பர்களுக்கு மிகாமல் குழு அமைத்துப் (ழுசடிரயீ ளவரனல) படிப்பதன் மூலம் சில புத்தகங்களையும் , கைடுகளையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம் (Exchange)
எவ்வளவு ஆண்டு தயாரிப்பு?
கல்லூரியிலிருந்தே இத்தேர்வுக்குத் தயார் செய்பவர்கள் கூட ஒரு வருடகாலம் படிப்பு முடிந்ததும் இந்த தேர்வுக்காக ஒதுக்கி முழு மூச்சாகத் தயாரிப்பது நல்லது.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் இந்தத் தேர்வை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுபவர்கள் இரண்டு வருடங்களாக மும்முரமாகப் படித்துத் தேர்வை எழுதுவது முதல் முறையிலேயே ஏதேனும் ஒரு பணியில் சேர உதவலாம்.
ஒரு நாளைக்குப் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் படிக்க வேண்டும். அதற்குக் குறைவாகப் படிப்பவர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாது. நல்ல தயாரிப்பு நமக்குத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் அதிகப்படியான உந்து சக்தியையும் அளிக்கும்.
எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல; எவ்வளவு தீவிரமாகப் படிக்கிறோம் என்பது தான் அவசியம். அந்த நொடியில் முழுவதுமாகத் தன்னை அந்த பணியில் கரைத்துக் கொள்வதே படிப்பு.
கோச்சிங் குறித்து
இப்பொழுது குடியுரிமைப் பணிகள் "pickup" ஆவதைப் பார்த்ததும், அது "Latest Trend" என்று அறிந்து பலர் கோச்சிங் ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் நடத்தும் பயிற்சியும் பார்வையற்றவர்கள் யானையைத் தடவிய மாதிரி இருக்கின்றது.
எல்.கே.ஜி முதல் ஐ.ஏ.எஸ் வரை வகுப்புகள் என்று சில வரிசை வீடுகளின் நெற்றியில் பெயர்ப்பலகைத் தொங்குவதைப் பார்க்கலாம். பரபரப்பாகப் பேசப்படும் நடிகரை வைத்துப் படம் செய்வதைப் போலத்தான் இதுவும்.
· முதலில் இத்தேர்வுக்கு யாரும் பயிற்சியளிக்க முடியாது. வேண்டுமானால் வழிகாட்டலாம். என்ன படிக்கலாம்? எந்தெந்தப் புத்தகங்கள் வாங்கலாம்; எப்படிப் படிப்பதை ஒழுங்குபடுத்தலாம் என நமக்குச் சுட்டுவிரலை நீட்ட மட்டுமே பிறரால் முடியும்.
· கோச்சிங் போனால் தேர்வாகிவிடலாம் என்ற நெருப்புக் கோழி பார்வையிலிருந்து விடுபட வேண்டும். கோச்சிங் போய் தோல்வியுற்றவர்கள் சதவிகிதம் வெற்றி பெற்றவர்கள் சதவிகிதத்தைவிட அதிகம்.
· இந்நிறுவனங்கள் தரும் குறிப்புகளை வழிகாட்டுதலுக்காக மட்டும் ஒருமுறை புரட்டுவது நல்லது. அவற்றையே நம்பி இருப்பது மின்மினிப் பூச்சியின் வெளிச்சத்தில் படிக்க நினைப்பது போல.
· இது போன்ற நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் மற்றவர்களைப் பார்த்துக் குழம்பி விடுவது உண்டு. அவர்கள் தோற்றமும் தோல் நிறமும் நமக்கு ஒருவித Complex-I ஏற்படுத்துவதும் உண்டு.
|