முதன்மை பக்கம்  செய்திகள்  வேலை வழிகாட்டி  செய்திகள்
 
வரிசைப் பட்டியல் வெளியிட தாமதம்
Webdunia
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிட காலதாமதம் ஆகிக்கொண்டு இருப்பதால் தொழிற் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி மருத்துவத்திற்கான வரிசைப் பட்டியல் கடந்த 22-ந் தேதியே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேற்று வரை வெளியிடப்படவில்லை. பட்டியல் வெளியிட இன்னும் ஒருசில நாட்கள் ஆகக்கூடும் என்று தெரிகிறது.

பொறியியல் படிப்பிற்கான வரிசைப் பட்டியல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த பட்டியலை வரும் 29-ந் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால் அறிவிக்கப்பட்டபடி கலந்தாய்வுகள் நடைபெறுவதிலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

பொறியியல் கல்வியில் சேர 95,000 பேரும், மருத்துவக் கல்விக்காக 13,500 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும்
10ம் வகுப்பு : 29 முதல் ஹால்டிக்கெட்
பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு
10ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை
11ல் செவிலியர் படிப்பிற்கான கலந்தாய்வு
கல்விக் கடன்: வட்டி குறைப்பு பரிசீலைனை
கணினி பழுதுபார்ப்பு பயிற்சி