முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி > M.Sc. Nursing படிப்புக்கு ஜூலை 21இல் கலந்தாய்வு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
M.Sc. Nursing படிப்புக்கு ஜூலை 21இல் கலந்தாய்வு
எம்.எஸ்சி. நர்சிங், எம்.ஃபார்ம்., எம்.பி.டி. உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூலை 21ஆம் தேதி மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்துள்ளார்.

நர்சிங் பதிவுமுறை உள்ளிட்ட சில காரணங்களால் எம்.எஸ்சி. நர்சிங் (M.Sc.Nursing) கலந்தாய்வு கடந்த 22ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதே போன்று அரசுக்கு உரிய இடங்களை சில தனியார் கல்லூரிகள் அளிக்காததால் எம்.பி.டி., எம்.ஃபார்ம். படிப்புகளுக்கான கலந்தாய்வும் கடந்த 23ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.

இந்தாண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் M.Sc.Nursing படிப்புக்கு மொத்தம் 22 இடங்கள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 25 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 126க்கும் மேற்பட்ட M.Sc.Nursing படிப்பு இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
MBBS படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு
IGNOU படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: கபில் சிபல் தகவல்
கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு
பி.எட்., படிப்புக்கான கலந்தாய்வு இடமாற்றம்
மருத்துவ படிப்புக்கு ஜூன் 29இல் ரேங்க் பட்டியல்