முதன்மை பக்கம் > செய்திகள் > வேலை வழிகாட்டி > க‌ல்‌வி > MBBS படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
MBBS படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு
மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 14,167 மாணவர்களுக்கு இன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இந்த ரேங்க் பட்டியல் ஒட்டப்படுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் சங்கர் ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 2 மாணவிகள் உட்பட 8 பேர் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ரேங்க் பட்டியலை tnhealth.org என்ற இணையதளத்திலும் காணலாம்.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி உட்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ். (MBBS) இடங்கள் உள்ளன. இதுதவிர மேல் மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உட்பட 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 283 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 6ஆம் தேதி துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
IGNOU படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: கபில் சிபல் தகவல்
கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு
பி.எட்., படிப்புக்கான கலந்தாய்வு இடமாற்றம்
மருத்துவ படிப்புக்கு ஜூன் 29இல் ரேங்க் பட்டியல்
பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வு: 60,000 மாணவர்களுக்கு அழைப்பு