ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

செவ்வாழை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

செவ்வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒரு பழமாகும். செவ்வாழைப்பழத்தின் முக்கிய பண்புகளில் ஒன்று அவற்றில் ஏராளமாக காணப்படும் பொட்டாசியம். இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.

செவ்வாழைப் பழங்களில் மெக்னீசியம் ஏராளமாக இருப்பது தசை மற்றும் நரம்பு செயல்பாடு, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
 
செவ்வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இது 100 கிராமுக்கு 89 கலோரிகளை வழங்குகிறது. இருப்பினும், செவ்வாழைப்பழங்களில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது உடல் எடையை குறைக்க உதவும்.
 
செவ்வாழைப்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஒரு சிறந்த ஆதாரமாகும். மற்ற வாழைப்பழ வகைகளை விட செவ்வாழைப்பழத்தில் அதிக பினோலிக் சேர்மங்கள்  உள்ளன.
 
செவ்வாழைப்பழத்தில் கரோட்டினாய்டு எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிரம்பியுள்ளது. இது புற்றுநோய் செல்கள் உருவாவதையும் மற்றும் பல்வேறு கண்நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
 
செவ்வாழைப்பழம் உட்பட அனைத்து வாழைப்பழங்களிலும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதை கவனத்தில் கொண்டு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவற்றை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
 
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு  வந்தால் நரம்புகள் பலம் பெறும்.
 
செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது. மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது.