1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (17:33 IST)

உடல் ஆரோக்கியத்துக்கு பீட்ரூட் தரும் நன்மைகள் என்ன...?

பீட்ரூட்டில் இன்றியமையாத சத்துக்கள் நிறைய உள்ளது. பீட்ரூட்டின் விசேஷம் அதன் இனிப்பு. எல்லா காய்கறிகளையும்விட அதிக சர்க்கரை இதில் உள்ளது.


பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன.

பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமின்றி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

ரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. பீட்ரூட் ஜூஸ் உடன்  கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது,  . ​​ரத்த புற்று நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

பீட்ரூட் ஜூஸ்ஸில், கீரைகளை விட அதிக இரும்புச்சத்து உள்ளது. பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும். பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்.

பீட்ரூட்டில் உள்ள ஃபோலிக் அமிலம், கர்ப்பிணித் தாய்மார்கள்  தங்களது உணவில் பீட்ரூட்டை சேர்க்க மிகவும் தகுந்த உணவு.  ஃபோலிக் அமிலம் குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது..இதிலுள்ள ஃபோலாசின் பெண்களின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. கருவுறும்  பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.