1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (16:30 IST)

எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்த அகத்திக்கீரை !!

அகத்திக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் ஏராளமாக இருப்பதால் இது உடலுக்குப் பலம் தரக்கூடியதாக இருக்கிறது.


அகத்தி அகத்திக் கீரை என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு மூலிகை, அகத்தி ஒரு சிறிய மர வகையைச் சேர்ந்ததாகும். இது சுமார் 10 அடிகள் முதல் 12 அடிகள் வரை நீண்டு வளரக் கூடியதாகும்.

அகத்திக் கீரையைக் கட்டாயம் வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் அகத்திக் கீரையை வீடுகளில் அமாவாசை அன்று கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்வார்கள்.

அகத்திக் கீரையில் மிகுந்த கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதினால் எலும்பு வளர்ச்சிக்கு அகத்திக் கீரை மிகவும் நல்லது.

இந்தக் கீரையை அளவோடுதான் சாப்பிட வேண்டும். உடல் நலத்திற்கு உகந்தது என்று எண்ணி அதிகமாகச் சாப்பிட்டால் கழிசல், வாயுத் தொல்லை போன்றவை உண்டாகும்.

தாய்மார்க்கு அதிக பால் சுரக்க அகத்திக் கீரை பயன் தருகிறது. உடல் நலமில்லாமல் மருந்து சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக அகத்திக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது மருந்தின் வீரிய சக்தியை முறித்துவிடும் ஆற்றலுள்ளது.

மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு ஏற்பட்டு புத்தி மிந்தம், சோம்பல், அறிவு தடுமாற்றம், ஞாபகக் குறைவு உள்ளவர்கள் அடிக்கடி அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் இவைகள் பூரணமாகக் குணமாக்கும்.