திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத பலன்தரும் வெட்டிவேரின் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக்  கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.
 
சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு  பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.
 
பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் 50 கிராம் இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக்  குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.
 
வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
 
வெட்டிவேர் 100 கிராம், வெந்தயம் 100 கிராம் இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்தலாம்.