ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (22:50 IST)

சீத்தாப்பழம் சாப்பிடுவதால் இரத்த விருத்தி செய்யமுடியுமா...?

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வந்தால் உடலை வலுவாக்கும். எலும்புகள் பலமடையும். பற்கள் உறுதிபெறும்.

இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வர காசநோய்கள், ஆஸ்துமா கட்டுப்படும்.
 
சீத்தாப்பழம் இரத்த விருத்தி செய்ய உதவுகிறது. இரத்த சோகையை போக்கும். மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும். அதிகப்படியான உடல் எடை உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வர ஊளைச்சதை குறைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.
 
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீத்தாப்பழத்தை விதைகளை நீக்கி அதில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சிறுநீர் பிரச்சினை தீர்ந்து சிறுநீர் தாராளமாக பிரியும், நீர்க்கடுப்பு தீரும்.
 
இஞ்சி சாறு, கருப்பட்டியுடன் சீத்தாப்பழத்தை சேர்த்து சாப்பிட பித்தம் விலகும். இரவு இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு சீத்தாப்பழம் சேர்த்து சாப்பிட நன்கு தூக்கம் வரும். தூக்கத்திற்கு சீத்தாப்பழம் சிறந்ததாகும்.
 
சீத்தாப்பழத்தின் சதை பகுதியை எடுத்து சிறிது உப்பு சேர்த்து முகப்பருவின் மேல் தடவி வர முகப்பரு மறையும். இதன் விதைகளை நன்றாக காயவைத்து அரைத்து பொடியாக்கி சம அளவு பாசிப்பயறு மாவு சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி நல்ல மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். மேலும் பேன்கள் அழிந்துவிடும்.