1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அதிகப்படியான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ள பூண்டு !!

பூண்டினில் செலினியம் எனும் தாதுச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது; இந்த செலினியம் சத்து புற்றுநோய்க்கு எதிராக போராடவும், வைட்டமின் இ சத்துடன் இணைந்து உடலின் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பூண்டு, இதய நோய்களை தடுப்பது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பல்வேறு புற்றுநோய்களை தடுப்பது என பலதரப்பட்ட ஆரோக்கிய  நன்மைகளை அளிக்கின்றது.
 
உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், நிச்சயம் பூண்டினை உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயை தடுக்க அல்லது அதை எதிர்த்து போராட, சமைக்கப்படாத 2-3 பூண்டுப்பற்களை உட்கொள்ளலாம்.
 
இருமல் மற்றும் சளி போன்ற சாதாரண நோய்களை நொடியில் குணப்படுத்தி விடும் தன்மை கொண்டவை. பூண்டினை பயன்படுத்தி, அதன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டு இந்த இருமல், சளி பிரச்சனைகளை எளிதில் விரட்டிவிடலாம்.
 
பூண்டினில் காணப்படும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள், இயற்கையில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் ஆகும். இவை உடலில் ஏற்படும் விஷத்தன்மையை போக்கி,  ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.
 
பூஞ்சைத்தொற்று ஏற்பட்டுள்ள உடல் பாகங்களை வெந்நீரால் கழுவிய பின், பூண்டு சாறு எடுத்து அந்த இடங்களில் தடவி வருவது நல்ல பலன்களை அளிக்கும்.