எளிதில் கிடைக்கும் துளசியில் உள்ள அற்புத மருத்துவ பலன்கள்!!

துளசியில் வெண்துளசி, கருந்துளசி என்று இருவகை உண்டு. பல இல்லங்களில் வெந்துளசியை வளர்க்கிறார்கள். துளசிச் செடி இருக்கும் இடங்களில் கிருமிகள் அண்டுவதில்லை. துளசிச் செடியை சுற்றியுள்ள காற்றும் மண்ணும் எப்போதும் தூய்மையாக இருக்கிறது.
தொற்றுநோய் பரவும் காலங்களில் சிறிது துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகி நோய் நம்மை  தாக்காது.
 
துளசி சளியை குறைக்கிறது. சுக்கு, திப்பிலி, மிளகு என்ற திரிகடுகு கஷாயத்தில் ஒரு பிடி துளசியை போட்டு அரிந்தி வந்தால் சளி, இரும்பல்  போன்றவை அண்டாது.
நாக்கில் ஏற்படும் ருசியற்ற தன்மையும், கொழகொழப்பும் தோன்றும். அவர்கள் துளசியை உண்டு வந்தால் நல்ல பலனை தரும்.
 
துளசி ஜீரண சக்தியை அதிகரிக்கும். துளசி நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது. உடலில் ஏற்படும் தேமல், படைகள், சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு துளசி சாறை உடலில் தடவி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
 
துளசி நாட்பட்ட இருமலை குணப்படுத்துகிறது. சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமாவை குணமாக்குகிறது. வாயுத் தொல்லையை போக்குகிறது. இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துகிறது.
 
கைகால் மூட்டு வலிகள் மற்றும் தசைகளில் ஏற்படும் கோளாறுகளுக்கு துளசி சாற்றை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்கு, தேமல் போன்ற நோய்களை குணமாக்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :