உடலுக்கு தேவையான கால்சியத்தை வழங்கும் தயிர்!!

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துக்களும் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும். இளம் பெண்கள் தயிர் சாப்பிடுவதால், அவர்களின் உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன நிறைந்துள்ளன. தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.
 
சர்க்கரை, இரத்த அழுத்தம், உடம் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழுப்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது  மோரையோ சாப்பிட்டு வர நோய்கள் நீங்கும்.
 
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும் தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
 
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
 
அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
 
சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :