வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (18:23 IST)

தினந்தோறும் உணவில் முட்டைகோஸ் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

தினந்தோறும் முட்டைகோஸ் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.


முட்டைகோஸ் தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி முட்டைகோஸ் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

தினந்தோறும் முட்டைகோஸ் சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகின்றனர்.

முட்டை கோஸ் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் நீர் சத்தையும், உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.