1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (19:25 IST)

அந்தமான் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க காரணம் என்ன…?

அந்தமானில் உள்ள மிகப்பழமையான தீவு சாண்டினல் ஆகும். இங்குள்ள பூர்வ ஆதிவாசி குடிகளுக்கு கிருஸ்துவின் போதனையை பரப்புவதற்காகச் சென்ற அமெரிக்க போதகர் ஜான் என்பவரை அங்குள்ள இனப்பற்றுள்ள ஆதிவாசிகள் அவரை கொன்று உள்ளதாக இரண்டு நாட்களுக்கு மின் தகவல் வந்தது.



இந்நிலையில் திகைக்க வைக்கும் புதிய மர்மங்கள் கிருஸ்தவரைக் கொன்ற ஆதிவாசிகளைப் பற்றி வருகின்றன.

சாண்டினல் தீவில் ஆயிரம் ஆண்டுகளாக ஆதிவாசிகள் வாழ்கின்றனர்.

தம் இனம் அல்லாத வேறு யார் இந்த தீவில் கால் வைத்தாலும் அடுத்த நிமிடமே அவர்களின் உயிரை எமன் வடிவில் உருமாறும் அவர்களின் அம்புகள் பறித்துவிடும்  இனப்பற்றுடைய பாரம்பரிய வாதிகள்.

27 வயதே ஆன ஜானின்  தைரியம் பாராட்டத்தக்கது ஆயினும் தனியாக மதத்தை பரப்ப அவர் தன் உயிரை துச்சமெனெ நினைத்ததுதான் பலரும் அவருடைய தவறு என கருதுகிறார்கள். ஆனால் அவர் தன் உயிரை விட கிருத்துவத்தை பரப்புவதிலேயே முனைப்பாக இருந்துள்ளார் என தெரிகிறது.



இந்த நிலையில் உலக அதிகார மூக்கு நீண்ட நாட்டாமை அண்ணன் அமெரிக்கா ஜானின் உடலை மீட்டு ஆக வேண்டும் என இந்தியாவை நிர்பந்திக்கிறது. இது இந்திய கடற்படைக்கு பெரும் சவாலாக உள்ளதாம்.

ஆயிரம் பேர் மட்டுமே உள்ள சாண்டினல் தீவு ஆதிவாசிகளின் காட்டுக் கோட்டையில் இருந்து இதுவரை எதுவும் கிடைக்கவில்லையாம்
.
மிகப் பழமையான இந்த தீவின் மர்மத்தை கலைத்து ஆதிவாசிகளின் மறுவாழ்வுக்கு வழிகாட்டுவது ஒருபக்கம் இருந்தாலும் தற்போது ஜானின் உடலை இந்திய கடற்படை மீட்க அரசு இனி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைக் காண உலகமே ஜானுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அதே வேளையில் அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் கூறிவருகிறது.