ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:50 IST)

இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

பரபபரப்பான சூழலுக்கு நடுவே இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில்  தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது.  இந்த கூட்டத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமை வகிக்கிறார் 
 
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா அதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டம் 
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம்-கர்நாடகா இடையே மோதல் அதிகரித்து வரும்  நிலையில் கூடுகிறது.
 
தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறப்பை மறுபரிசீலனை செய்ய கர்நாடகா  கோரிக்கை வைக்கும் நிலையில், மேட்டூர் அணை நீர் வீணடிக்கப்படுவதாகவும், அதை ஆய்வு செய்யவும் கர்நாடகா வலியுறுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 
 
தமிழகத்துக்கு நீர் திறப்பதை எதிர்த்து பெங்களூரில் இன்று பந்த் நடக்கும் நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva