திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (17:37 IST)

கொரோனாவில் இருந்து குணமான ஆளுனர் புரோஹித்: தலைவர்கள் வாழ்த்து!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கவர்னர் மாளிகையில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவ்வப்போது மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சையை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
 
இந்த நிலையில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் முழுமையாக கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமாகிவிட்டார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் பூரணமாக குணமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து கவர்னர் புரோகித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் கவர்னர் புரோகித் ஆகிய இருவரும் கொரொனாவில் இருந்து குணமாகிய விஐபிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது