ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (13:50 IST)

காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.! டிவி ஷோ பார்த்து கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம்.!!

Child Murder
பீகார் மாநிலத்தில் சூட்கேஸில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், டிவி ஷோவை பார்த்து தனது குழந்தையை கொன்றதாக கைதான தாய் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
பீகார் மாநிலம், முஸாபர்நகரில் சூட்கேஸில் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கணவனை பிரிந்து காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு காஜல் என்ற பெண் தனது 3 வயது பெண் குழந்தையை கொலை செய்துள்ளார்.

மூன்று வயது பெண் குழந்தையை உடன் அழைத்து வர தனது காதலன் ஒப்புக் கொள்ளாததால், மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை சூட்கேசில் போட்டு குப்பையில் வீசியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் டிவியில் குற்றங்களின் பின்னணியாக ஒளிபரப்பப்படும் 'கிரைம் பாட்ரோல்' என்ற நிகழ்ச்சியை பார்த்துதான் கொலையை அரங்கேற்றியதாக அப்பெண் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
இந்த கொலையில் காதலனுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.