ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (21:02 IST)

''எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம்'' -பிரதமர் மோடி தமிழில் டுவீட்

ranil vikramasinke - modi
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு வந்துள்ளார். இதுபற்றி  பிரதமர் மோடி தன் டிவிட்டர் பக்கத்தில்,   ‘’எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனஞ்செலுத்தப்பட்டது என்று தமிழில் டுவீட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

‘’தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை செயலாற்றுமென நான் உறுதியாக நம்புகின்றேன். இந்திய - இலங்கை நட்புறவின் 75 ஆண்டுகளையும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையையும் இவ்வருடத்தில் நாம் கொண்டாடுகின்றோம். இலங்கையில் வசித்துவரும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்காக 75 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களிலும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு வழங்கும். இருநாடுகளினதும் வர்த்தக மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக நாகபட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனஞ்செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் மனிதாபிமான அடிப்படையிலும் கருணையுடனும் அணுகப்படவேண்டுமென்பதை நாம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அவர், ‘’இந்தியா - இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன். அத்துடன் சுற்றுலாத்துறை, எரிசக்தி, வர்த்தகம், கல்வி, நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் திறன்விருத்தி ஆகியவற்றில் தொடர்புகளையும் ஒத்துழைப்பினையும் மேலும் வலுவாக்குவதற்ககாகவும் நாம் செயலாற்றியுள்ளோம் ‘’

மேலும், ‘’இந்தியா - இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன். அத்துடன் சுற்றுலாத்துறை, எரிசக்தி, வர்த்தகம், கல்வி, நிதியியல் தொழில்நுட்பம் மற்றும் திறன்விருத்தி ஆகியவற்றில் தொடர்புகளையும் ஒத்துழைப்பினையும் மேலும் வலுவாக்குவதற்ககாகவும் நாம் செயலாற்றியுள்ளோம்.’’என்று தெரிவித்துள்ளார்.