திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 மே 2023 (18:53 IST)

மனைவியுடன் தொடர்பில் இருந்தவரை கொன்ற கணவர்

தேனி மாவட்டத்தில் தன் மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, தாலுகாவைச் சேர்ந்தவர் தீபாவளி.  இவரது இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன்  திருமணமாகி 7 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில், சங்கீதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த  ஈஸ்வரன் என்ற நபருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது.

ஈஸ்வரனுக்கும் ஏற்கனவே, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளள நிலையில், இவர்களின் தகாத உறவு பற்றி அறிந்து, சங்கீதாவின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு,.  சங்கீதாவும், ஈஸ்வரனும்  ஜோடியாக ஊர்சுற்றிவிட்டு, பாதுகாப்பு வேண்டி,  காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீஸார் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், இன்று சங்கீதாவும், ஈஸ்வரனும், ஜோடியாக ஆண்டிப்பட்டிகு பேருந்தில் வந்துள்ளனர். இதைப் பார்த்த சங்கீதாவின் கணவர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால், இருவரையும் சரமாரியாகக் குத்திவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இருவரையும் மீட்ட போலீஸார் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, ஈஸ்வரன் உயிரிழந்தார். சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அதிர்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது.