ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (17:36 IST)

இந்தியன் பட ஸ்டைலில் லஞ்சம் வாங்கிய மனைவியை காட்டிக் கொடுத்த கணவன்! - ஹைதராபாத்தில் ஆச்சர்ய சம்பவம்!

Bribe Casze

இந்தியன் 2 திரைப்படத்தில் வரும் காட்சி போல தனது மனைவி லஞ்சம் வாங்கியதை கணவனே காட்டிக் கொடுத்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

 

 

அரசு துறைகளில் லஞ்சம் பெறும் சம்பவங்கள் இன்னமுமே தொடர்ந்து வருகிறது. அவ்வாறாக லஞ்சம் கேட்பவர்களை மக்கள் அவ்வபோது லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க செய்வதும் நடந்து வருகிறது. சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் லஞ்சம் பெறும் அதிகாரிகளை அவரவர் வீட்டில் உள்ளவர்களே வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என பேசியிருப்பார்கள். தற்போது அப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடந்துள்ளது.

 

ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யஜோதி, இவரது கணவர் ஸ்வர்ண ஸ்ரீபத். மாநகராட்சியில் பணிபுரியும் திவ்யஜோதி சில ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கே லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார். ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டுக்கட்டாக பணத்தை பெற்று பூஜை அறை, படுக்கை அறை உள்ளிட்டவற்றில் பதுக்கி வைத்துள்ளார்.
 

 

மனைவியின் இந்த செயல்பாட்டை பொறுக்க முடியாத ஸ்வர்ண ஸ்ரீபத் அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. அந்த வீடியோவின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணையில் சிக்கியுள்ளாராம் திவ்யஜோதி. திரைப்படத்தில் வந்த சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K