வீட்டுப்பாடம் செய்யாததால் கடுமையான தண்டனை : 7 ஆம் வகுப்பு மாணவி பலி


Murugan| Last Modified செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (13:40 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை அவளின் உயிரைப் பறித்துள்ளது.
 
 

 
ஜார்கண்ட் மாநிலத்தின் புசூர் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில், ரூப்வந்தி குமாரி என்ற  மாணவி ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்ற காரணத்தால், அவரின் ஆசிரியர் சத்யேந்திர யாதவ் என்பவர் குமாரியை, வெயிலில் நெடுநேரம் முட்டிப் போட வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவளின் முதுகில் நிறைய செங்கல் கற்களையும் வைத்துவிட்டார். இதில், அந்த சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டர்.
 
ஏழ்மையின் காரணமாக அந்த சிறுமியின் பெற்றோர்களால், அவளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கிருந்த மருத்துவர்கள், சிறுமியின் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு பிறகு வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். வீட்டிற்கு வந்த சிறுமி சிறிது நேரத்தில் இறந்துவிட்டாள்.
 
இதனால் கோபமடைந்த சிறுமியின் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் இனி அந்த பணியில் நீடிக்கக்கூடாது என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்த ஆசிரியரோ இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :