குழந்தைக்கு தாயான சன்னி லியோன் - வைரல் புகைப்படம்


Murugan| Last Modified வெள்ளி, 21 ஜூலை 2017 (14:36 IST)
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஒரு குழந்தைக்கு தாயாக மாறியிருக்கிறார்.

 

 
அதிர்ச்சியடையாதீர்கள்!.. அது அவர் பெற்றெடுத்த குழந்தை அல்ல. சமீபத்தில்தால் ‘என் வாழ்வில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதால் நான் தற்போது குழந்தை பெறுவது கஷ்டம். ஒருநாள் திடீரென கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன். அதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகலாம். இந்த குழந்தை எங்கிருந்து வந்தது என்று கூட நினைக்கலம்’ என்று கூறி அதிர வைத்தார். 
 
இந்நிலையில், ஒரு பெண் குழந்தையுடன் அவரும், அவரின் கணவர் டேனியலும் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


 

 
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரை சேர்ந்த 21 மாத குழந்தையான நிஷா கவுர் வெபர் என்கிற குழந்தையை அவர்கள் தத்தெடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. நிஷாவை பற்றி பேசும் சன்னி லியோன் ‘ அவள் மிகவும் அழகு. அவள் சிரிக்கும் போது உங்கள் இதயம் உருகும். அவளை சுதந்திரமாக வளர நாங்கள் அனுமதிப்போம்’ என அவர் கூறியிருக்கிறார். 
 
குழந்தையுடம் அவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :