1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:36 IST)

பிரதமர் மோடி தவறான முடிவை எடுத்துள்ளாரா? சு.சுவாமி ஐயம்!

ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை பெரிதளவு பாதித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மத்திய அரசு சமீபத்தில் நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பர் 1-6 ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியானது.  
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முன்னரே இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்தும் எனக்கு கிடைத்த உறுதியான தகவலின்படி, நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான வசதிகள் தற்போது மாணவர்களுக்கு இல்லை. 
 
தேர்வு அறிவித்ததிலிருந்து இளைஞர்களிடையே அதிக அளவில் விரக்தி ஏற்பட்டுள்ளது. எனவே தேர்வுகளை நடத்தினால், இந்தியா முழுவதும் ஏராளமான இளைஞர்கள் தற்கொலை செய்வதற்கு நீங்கள் காரணமாகிவிடுவீர்கள்.  
 
எனவே, இந்த தேர்வுகளை தீபாவளிக்குப் பிறகு நடத்தவேண்டுமென்று மத்திய கல்வித்துறைக்கு நீங்கள் வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுட்டிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தாமல் தாமதப்படுத்துவது மாணவர்களின் படிப்பை பாதிக்கும் என டெல்லி ஐஐடி இயக்குநர் தெரிவிக்கிறார். ஆனால், ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை பெரிதளவு பாதித்துள்ளது. 
 
அப்படியானால் பிரதமர் மோடி தவறான முடிவை எடுத்துள்ளாரா? இன்னும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.