ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (08:20 IST)

மோடியை எதிர்த்து யாராவது பேசினால் கை வெட்டப்படும்: பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு

பாரதிய ஜனதா கட்சி தலைவர்களையோ, பிரதமர் மோடியையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கையை வெட்டுவோம் என  ஹிமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் சத்தி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது
 
பிரதமர் மோடியை 'திருடன்' என ராகுல்காந்தி பேசியபோது அவரை கடுமையாக தாக்கி பேசிய சத்பால் சிங் சத்தியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது என்பது தெரிந்ததே. இந்த சர்ச்சை பேச்சுக்காக அவருக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்திருந்தது
 
இந்த நிலையில் தடைக்காலம் நீங்கிய பின்னர் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சத்பால் சிங் சத்தி, 'மேடையில் உள்ள பாஜக தலைவர்களையோ, பிரதமர் மோடியையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கையை வெட்டி வீசுவோம்' என மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.


சத்பால் சிங் சத்தி பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவரை தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் சித்தி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்