ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (10:32 IST)

பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி..! – புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் பிரமுகர்!

4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் பாராட்டியுள்ளார்.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. முன்னர் காங்கிரஸ் ஆண்ட உத்தர பிரதேசத்தில் தற்போது ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பாஜக வெற்றி குறித்து பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் “பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி. அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் அவரது செயல்பாடுகள் பன்முக திறன் உடையதாகவும், மெச்சத்தகுந்த வகையிலும் இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதனை பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

மேலும் “கட்சிக்குள் அதிக பிரச்னைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் மிகக்கடுமையாக காங்கிரஸ் உழைக்க வேண்டியுள்ளது. சில மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் சரிவை சந்தித்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.