வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:54 IST)

‘தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமில்லை’

தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
 

 
தற்போதுள்ள நடைமுறைப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309இன் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். அவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.
 
ஆனால், மத்திய சட்ட ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, தற்கொலை முயற்சி செய்வோரை - அவர்கள் மன அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் என்று வகைப்படுத்த உள்ளது.
 
அதன்படி, உரிய சிகிச்சையும், அரவணைப்பும் அளிக்க வேண்டும் என்று மனநல ஆரோக்கிய பராமரிப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டத்திருத்தம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.