வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:36 IST)

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்: காரணம் என்ன? தீர்வு என்ன?

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கான காரணங்களையும் தீர்வுகளை குறித்து மத்திய அரசு கவனிப்பதாகயில்லை.


 
 
கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் நடவடிக்கையும், விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயம் செய்வதுமே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
 
அதேபோல், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு வரப்படாததே விலை கட்டுக்குள் வராததற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் விலை அதிகரிப்பு கனிசமாக குறையும் என கூறப்படுகிறது.